பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் 
செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

புதுடெல்லி:

லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராம்விலாஸ் பஸ்வானின் உடல், மருத்துவ நடைமுறைகளுக்கு பிறகு இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதையடுத்து பஸ்வானின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி, நேரில் சென்று பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலிக்கு பிறகு இன்று பிற்பகல் பஸ்வானின் உடல் விமானம் மூலம், அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT