திருவனந்தபுரம்:
மத்திய பிரதேச மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் டப்ரா தொகுதியில் பாஜக சார்பில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். அவரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கமல்நாத்தின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி கூறியதாவது:-
கமல்நாத் எங்கள் கட்சியை சேர்ந்தவர்தான் ஆனால் தனிப்பட்ட வகையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எனக்கு பிடிக்கவில்லை. அவர் யாராக இருந்தாலும் சரி... நான் அந்த பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. இது துரதிஷ்டவசமானது.
என தெரிவித்தார்.