காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 
செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்க ராகுல் காந்தி கோரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தொழில்கள் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

நாடு திரும்ப விரும்பும் அவர்கள், விமானங்கள் ரத்தால் வர முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு அவர்களுக்கு விமானங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.