காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 15 நாள் பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் டைம் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, ‘இந்தியாவில் அமைதியும், சமூக நல்லிணக்கமும் கடும் சவால்களை சந்தித்து வருகின்றன. பிரிவினைவாத சக்திகள் இந்தியாவின் அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் தீங்கு விளைவித்து வருகின்றன’ என பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
மேலும், ‘இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக வேலை தேடும் 30,000 பேரில் 450 பேருக்கே வேலை கிடைத்து வருகிறது. சரியான வேலைவாய்ப்பை அளிக்காமல் இளைஞர்களுக்கு தெளிவான முன்னேற்றப் பாதையை அமைத்துக் கொடுக்க முடியாது.