செய்திகள்

மாணவர்கள் போராட்டத்தை விமர்சிக்கும் பா.ஜ.க.விற்கு காலம் பதில் சொல்லும்: ராகவா லாரன்ஸ்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை விமர்சிக்கும் பா.ஜ.க.விற்கு காலம் பதில் சொல்லும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார்.

மாலை மலர்

இதைத்தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் கோவில் வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


‘நீட்’ தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாதது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ கூடாது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை பா.ஜ.க. விமர்சிக்கிறது. பா.ஜ.க.விற்கு காலம் பதில் சொல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு நடிகர்கள் பலரும் ஆதரவளித்தனர்.

அதேபோல், நடிகர் ராகவா லாரன்சும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அது மட்டுமின்றி மெரினாவில் நடந்த போராட்டத்திலும் அவர் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.