இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு தரவரிசை வழங்கப்பட்டு அதன்படி போட்டி அட்டவணை தயாரிக்கப்படும். இதனடிப்படையில் ஆண்கள் ஒற்றையருக்கான பிரிவில் ரபேல் நடால் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
நடப்பு சாம்பியன் பெடரர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த வருடம் காயத்தால் நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்து ஆஸ்திரேலிய ஓபனுக்கு திரும்பியதால் பெடரர் 17-வது இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.