ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மனைவியும் முன்னாள் முதல்-மந்திரியான ராப்ரிதேவி ஒரு பேட்டியில் கூறியதாவது:-
பீகார் துணை முதல்வராக இருந்த என் மகன் தேஜஸ்வி, நாட்டு மக்களுக்காக நல்லது செய்து வந்தான். எனது இன்னொரு மகனும் மக்களுக்காக பாடுபட்டு வருகிறான். எனது மகன்கள் நாட்டு மக்களுக்கு உழைப்பது நிதிஷ்குமாருக்கு பிடிக்கவில்லை. என் மகன்கள் மீது அவருக்கு பொறாமை. அதனால்தான் அவர் என் மகன்களிடம் குறி வைத்து விளையாடி விட்டார்.
பா.ஜ.க.வுடன் சேர்ந்து இந்த சதி திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இப்போது யாரிடம் தான் சொத்துக்கள் இல்லை? நிதிஷ் குமார் தனது சொத்துகள் பற்றி விசாரணை நடத்த தயாரா? லல்லு பிரசாத் குடும்பத்தை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்.
இவ்வாறு ராப்ரிதேவி கூறினார்.