இரு அணி கேப்டன்களையும் அழைத்து ஐசிசி நடுவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா அபாரமாக பந்து வீசினார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய ரபாடா, 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட ரபாடா, அடுத்த இரண்டு டெஸ்டில் தடைபெறும் அபாயத்தையும் பெற்றுள்ளார். முதல் இன்னிங்சில் ஸ்மித்தை வீழ்த்தியதன் மூலம், சந்தோசத்தில் ஸ்மித்தை இடித்தார். இதனால் ரபாடா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் விதிமுறை 2-ஐ மீறியதாக குற்றம்சாட்டப்பட்டதுள்ளது. இதற்கு 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும்.
ஏற்கனவே ஐந்து டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ளதால் இந்த புள்ளிகளுடன் சேர்த்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படலாம்.
ஏற்கனவே பிரச்சினையில் மாட்டிய ரபாடா, 2-வது இன்னிங்சில் வார்னரை க்ளீன் போல்டாக்கினார். அவுட்டாக்கிய சந்தோசத்தில் வார்னின் முகத்தின் அருகே சென்று தனது எதிர்ப்பை வெளிக்காட்டினார். இதனால் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது லெவல்-1 குற்றமாகும். இதற்கு ஒரு டிமெரிட் புள்ளி வழங்கலாம். இதனால் ரபாடா பெரிய பிரச்சினையில் மாட்டியுள்ளார்.