இந்தோனேசியாவில் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் 4-ம் நிலை வீரரான பி.வி. சிந்து தாய்லாந்தை சேர்ந்த சோசுவாங்கை எதிர்கொண்டார். இதில் பி.வி. சிந்து 21-12, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு போட்டியில் 2-ம் நிலை வீரரான முன்னணி வீராங்கனையான ஸ்பெயின் நாட்டின் மரின் கரோலினா சீனாவின் சென் ஜியாஓஜின்-ஐ எதிர்கொண்டார். இதில் கரோலினா அதிர்ச்சிகரமாக 12-21, 21-10, 20-22 என தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.