கைது 
செய்திகள்

புழல் அருகே லாரியில் ரூ.1 கோடி மதிப்புள்ள எரிசாராயம் கடத்தல்- டிரைவர் கைது

புழல் அருகே லாரியில் ரூ.1 கோடி மதிப்புள்ள எரிசாராயம் கடத்தியதாக டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

செங்குன்றம்:

புதுவையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு லாரியில் எரிசாராயம் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது எரிசாராயம் கடத்திவந்த லாரி புழல் பகுதியில் உள்ள யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து மாதவரம் மதுவிலக்கு பிரிவு போலீசாருடன் இணைந்து புழல் அருகே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எரிசாராயம் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்தனர். அதில் 561 கேன்களில் எரிசாராயம் இருப்பது தெரிந்தது. லாரியுடன் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். உத்தர பிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராம்தனியாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.