கைது 
செய்திகள்

புழல் அருகே கட்டிட காண்டிராக்டரை தாக்கியவர் கைது

புழல் அருகே கட்டிட காண்டிராக்டரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம்:

புழல் ஜீவா தெருவை சேர்ந்தவர் சதர். கட்டிட காண்டிராக்டர். இவர் அதே தெருவில் ஒரு கட்டிடம் கட்டி வருகிறார். அவரிடம், அதே பகுதியில் கட்டிட பொருட்களை விற்கும் சேகர் என்பவர் செங்கல், மணல், சிமெண்ட் சப்ளை செய்வதாக கூறினார். அதற்கு சதா, நான் வேறொரு ஏஜென்சியில் பொருள்களை எடுத்து வருகிறேன். முடிந்தால் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார். இதில் ஆத்திரம் அடைந்த சேகர் உருட்டுக்கட்டையால் சதரை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சதர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT