மாஸ்கோ:
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
இதேபோல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அப்பகுதி ஆளுநர்கள் தேசிய கொடியேற்றினர்.
இந்நிலையில், ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் 73-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.