செய்திகள்

அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி ஆலோசனைகூட்டம் - ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

வேலப்பன் சாவடியில் அ.தி.மு.க. புரட்சிதலைவி அம்மா அணி ஆலோசனைகூட்டம் நாளை மாலை நடக்கிறது. இதில் முன்னாள் முதல்-அமைச்சரும், கழக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

மாலை மலர்

சென்னை:

திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வேலப்பன் சாவடி திருவேற்காடு பாலம் அருகில் நாளை (ஞாயிறு) மாலை நடக்கிறது.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், கழக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், அவை தலைவர் இ.மதுசூதனன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய பகுதி வட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் மா.பா.க. பாண்டியராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.