மொகாலியில் நேற்று முன்தினம் நடந்த குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 5-வது ஓவரில் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா வீசிய ஒரு பந்தை நடுவர் நந்தகிஷோர் ‘நோ-பால்’ என்று அறிவித்தார். நடுவரிடம் சொல்லாமலே விக்கெட்டில் பந்து வீசும் இடத்தை சந்தீப்ஷர்மா மாற்றியதால் நடுவர் இந்த முடிவை எடுத்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்தீப் ஷர்மா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது இந்த ஒழுங்கீனம் குறித்து விசாரணை நடத்திய போட்டி அமைப்பு குழுவினர் சந்தீப் ஷர்மாவுக்கு, போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்தனர்.