செய்திகள்

பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தால் சென்னைக்கு 198 ரன்கள் இலக்கு

கிறிஸ் கெயில், மயன்க் அகர்வால் மற்றும் கருண் நாயரின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணிக்கு 198 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. #KXIPvCSK #IPL

மொஹாலி:

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 8-வது ஓவரில் 96 ரன்களை பஞ்சாப் எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.

37 ரன்கள் எடுத்து லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடி வந்த கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வாட்சன் பந்தில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய மன்யங் அகர்வால் சற்றே அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

15-வது ஓவரில் ராகுல் ஆட்டமிழக்க பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய யுவராஜ் சிங், 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய பின் வரிசை வீரரான கருண் நாயர் அதிரடியாக விளையாடினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது. 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியுள்ளது. #KXIPvCSK #IPL

SCROLL FOR NEXT