செய்திகள்

பஞ்சாப் சிறையில் வன்முறை - கைதிகள் மோதலில் ஒருவர் பலி

பஞ்சாப் மாநிலம் லூதியானா மத்திய சிறையில் கைதிகளுக்குள் நிகழ்ந்த மோதலில் ஒருவர் பலியானார், 35 பேர் காயமடைந்தனர்.

லூதியானா:

பஞ்சாப் மாநிலம் லூதியானா மத்திய சிறையில் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த சன்னி என்ற கைதி பாட்டியாலா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவல் லூதியானா சிறையில் இருந்த அவரது கோஷ்டியை சேர்ந்த கைதிகளுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசார் சன்னியை கொன்றுவிட்டதாக கூறினர்.

எதிர்கோஷ்டியை சேர்ந்த கைதிகள் மீது கற்களை வீசி தாக்கினார்கள். இருதரப்பும் கல்வீச்சில் ஈடுபட்டது. அப்போது ஒரு போலீஸ்காரர் வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் வன்முறை மேலும் தீவிரமானது. இதில் ஒரு கைதி இறந்தார். சிறை அதிகாரிகள் உள்பட 35 பேர் காயம் அடைந்தனர். அதிகாரிகளின் வாகனம், சமையலறையின் ஒரு பகுதி ஆகியவற்றுக்கு தீவைக்கப்பட்டது. சிறையில் நடைபெற்ற இந்த வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்த முதல்-மந்திரி அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT