கோப்புப்படம் 
செய்திகள்

கட்டுப்பாடுகள் தளர்வு... அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்பிய பாகிஸ்தானியர்கள்

இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்பினர்.

வாகா:

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து சீரடைந்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கால் பல மாதங்களாக நாடு திரும்ப முடியாமல் தவித்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலர், இன்று அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்பி உள்ளனர். எல்லையில் உரிய சோதனைகளுக்கு பிறகு அவர்கள் தங்கள் பகுதிக்கு சென்றனர்.

மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்ததாகவும், ஊரடங்கு காரணமாக வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாகவும் நாடு திரும்பியவர்களில் ஒருவரான கராச்சியைச் சேர்ந்த நபர் கூறினார். நாடு திரும்ப உதவி செய்த வெளியுறவுத்துறை மற்றும் பாகிஸ்தான் தூதரகத்திற்கு நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT