செய்திகள்

ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பஞ்சாப் முதல்வர் ஆறுதல்

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரின் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை முதல் மந்திரி அமரிந்தர் சிங் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #AmritsarTrainAccident #CaptainAmarinderSingh

மாலை மலர்

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகர் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ள நிலையில் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில முதல் மந்திரி அமரிந்தர் சிங் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

அமன்தீப் மற்றும் குருநானக் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்த அமரிந்தர் சிங், விபத்து நிகழ்ந்த ரெயில்வே கேட் பகுதியையும் பார்வையிட்டார்.

முன்னதாக, இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என நேற்றிரவு அமரிந்தர் சிங் அறிவித்திருந்தார்.