செய்திகள்

தொடரும் கொடூரம் - பஞ்சாப்பில் 15 வயது சிறுமி கற்பழித்து கொலை

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் கற்பழித்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் மனேபூர் கிராமத்த=இ சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவர் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட அரசு கட்டிடத்தில் ஒரு சிறுமியின் உடல் இருப்பதாக சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணமடைந்தவர் காணாமல் போன அந்த சிறுமி தான் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அந்த சிறுமி 8-ம் வகுப்பு படித்து பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் போயுள்ளது. அவர் கற்பழிக்கப்பட்டு பின்னர் துப்பட்டாவினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT