செய்திகள்

சேலை அணிந்து 'ஸ்கை டைவிங்' செய்த இந்திய பெண் - வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து 'ஸ்கை டைவிங்' செய்து புதிய சாதனைப்படைத்துள்ளார்.

மாலை மலர்

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஷிடேல் ரானே மகாஜன் ஸ்கை டைவிங்கில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் உலகில் உள்ள 7 கண்டங்களிலும் ஸ்கை டைவிங் செய்து சாதனைப்படைத்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் அடுத்த மாதம் வரும் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முயற்சி செய்ய விரும்பினார். அதனால் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து ஸ்கை டைவிங் செய்தார்.

இவர் 18 தேசிய, 6 சர்வதேச அளவில் சாதனைப்படைத்துள்ளார். உலக முழுவதும் 704 தடவை ஸ்கை டைவ் செய்துள்ளார். தாய்லாந்தில் உள்ள ஸ்கை டைவ் மையத்தில் வைத்து இவர் நேற்று சாதனைப்படைத்தார். சேலை அணிந்து இவர் இரண்டு முறை டைவ் செய்தார்.

இது குறித்து பேசிய மகாஜன் 'இந்திய பெண்கள் வீட்டில் இருக்கும் போது மட்டும் சேலையை அணிய கூடாது. இது போன்ற சாகசங்கள் செய்யும் போதும் பயன்படுத்த வேண்டும் என்பதை நிரூபிக்கவே இந்த சாகசத்தை செய்தேன்' என கூறினார். #tamilnews