கோப்பு படம் 
செய்திகள்

கும்பகோணம் அருகே மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த வாலிபருக்கு பாட்டில் குத்து

கும்பகோணம் அருகே மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த வாலிபரை அவரது கணவர் சோடா பாட்டிலால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அருகே பட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் சக்தி என்கிற சக்திதாசன் (வயது 30) கூலி தொழிலாளி. இவரது மனைவி ரோஜா.

அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சதீஷ்குமார்(25) கூலி தொழிலாளி. சம்பவத்தன்றுரோஜாவிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதை தட்டி கேட்ட ரோஜாவின் கணவர் சக்திதாசனுக்கும் சதீஷ் குமாருக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் சக்திதாசன் சதீஷ் குமாரை சோடா பாட்டிலால் தலை மற்றும் வயிறு ஆகிய இடங்களில் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் சதீஷை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.