ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் லசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ஏ.கே ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல்வேட்டை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.