கைது 
செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

புளியரை சோதனை சாவடி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தென்காசி:

புளியரை சோதனை சாவடி அருகே போலீஸ் சார்பு இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் வி.கே.புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பதும், இவர்கள் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் ரூ.63,360 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.