செய்திகள்

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்: புஜாரா சதம் அடித்து அசத்தல்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் இந்திய வீரர் புஜாரா அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

மாலை மலர்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா. ஐ.பி.எல். தொடரில் ஏலம் எடுக்கப்படாத இவர், இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட சென்றுள்ளார்.

புஜாரா நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். நாட்டிங்காம்ஷைர் அணி கவுண்டி சாம்பியன்ஸ்ஷிப் டிவிஷன் 2-ல் கிளாஸ்டர்ஷைர் அணியை எதிர்கொண்டது.

இதில் புஜாரா சதம் அடித்து அசத்தினார். 174 பந்தில் 13 பவுண்டரிகளுடன் சதம் அடித்த புஜாரா, 112 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவர் 4-வது விக்கெட்டுக்கு மைக்கேல் லம்ப் உடன் இணைந்து 185 ரன்கள் குவித்தார். புஜாரா அவுட்டாகும்போது நாட்டிங்காம்ஷைர் அணி நான்கு விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சதம் மூலம் புஜாரா முதல்தர போட்டியில் 39 சதங்கள் அடித்துள்ளார்.