செய்திகள்

என் வீட்டில் எந்த ஆவணமும் சிக்கவில்லை: புகழேந்தி பேட்டி

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் என் வீட்டில் எந்த ஆவணமும் சிக்கவில்லை என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

பெங்களூர்:

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளருமான புகழேந்தியின் வீடு பெங்களூர் முகேஷ் பாளையாவில் உள்ளது.

நேற்று சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தினர் வீடு-அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் பெங்களூரில் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனை பற்றி புகழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், “என் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது நான் வீட்டில் தான் இருந்தேன். அதிகாரிகளுக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்தேன். என் வீட்டில் எதுவும் சிக்கவில்லை. அவர்கள் எந்த ஆவணமும் எடுத்துச் செல்லவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT