புகழேந்தி 
செய்திகள்

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை- புகழேந்தி பேச்சு

சிறப்பான ஆட்சி நடந்து வருவதால் தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை என்று புகழேந்தி பேசியுள்ளார்.

திண்டுக்கல்:

அ.ம.மு.க. அதிருப்தியாளர் புகழேந்தி திண்டுக்கல் வந்தார். அவர் திண்டுக்கல், தேனி, மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:-

கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த் 43 வருடங்கள் இங்கிருந்தும் தமிழ் பேச தடுமாறி வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெற்றிடத்தை நிரப்பி விட்டனர்.

சிறப்பான ஆட்சி நடந்து வருவதால் தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை. பணத்திற்காக நான் விலை போனதாக டி.டி.வி.தினகரன் தரம் தாழ்ந்து பேசுகிறார். இது கண்டிக்கத்தகது. எனவே நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் சேரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT