புதுச்சேரி

புதுச்சேரியில் அடுத்தடுத்து மாயமான 2 சிறுமிகள் மீட்பு

புதுச்சேரியில் அடுத்தடுத்து 2 சிறுமிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் விழுப்புரம் சென்று சிறுமியை மீட்டு அறிவுரை கூறி தாயிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த அக்டோபர் மாதம் 12-ந் தேதி இரவு திடீரென மயாமானார்.

சிறுமி மாயம்

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மயாமாகி ஒருமாதம் ஆகியுள்ள நிலையில் சிறுமியை பற்றி எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி போலீசார் திணறி வருகின்றனர்.

2 மாணவிகள் மாயம்

இந்த நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது மாயமானார். அவரின் தாய் புகாரின்பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதேபோல முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி டியூஷன் சென்டரிலிருந்து வீடு திரும்பிய போது மாயமானார்.

பரபரப்பு

புதுச்சேரியில் அடுத்தடுத்து 2 சிறுமிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமிகளை யாரேனும் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் உத்தரவின் பேரில் லாஸ்பேட்டை மற்றும் முத்தியால்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறுமிகள் வீடு அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மீட்பு

அதன்படி முத்தியால்பேட்டை சிறுமி கோட்டக்குப்பம் சென்றது தெரியவந்தது. கோட்டக்குப்பத்தில் சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அதுபோல் லாஸ்பேட்டையில் மாயமான சிறுமி தாயிடம் கோபித்து கொண்டு பஸ் ஏறி விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் விழுப்புரம் சென்று சிறுமியை மீட்டு அறிவுரை கூறி தாயிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT