புதுச்சேரி

புதுச்சேரி ஆரியப்பாளையத்தில் ரூ.15 லட்சம் போதை பொருட்களுடன் 5 பேர் கைது

போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், வில்லியனூர் போலீசார் இணைந்து ஆரியப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

போதைப் பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதுவரை யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், வில்லியனூர் போலீசார் இணைந்து ஆரியப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா, புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

5 பேர் கைது

இதுதொடர்பாக காரில் இருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கல்லூரி மாணவர்கள், கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக போதைப்பொருட்களை வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 200 கிலோ புகையிலை பொருட்கள், 5 புதிய செல்போன்கள், ரூ.2 லட்சம் ரொக்கம், எடை எந்திரம், கார் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். போதைப் பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதுவரை யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT