புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டைதனியார் பள்ளி அருகே நேற்று மாலை ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியே செல்லும்பெண்களை பாட்டுப்பாடி கிண்டல் செய்வதாக முதலியார் பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது 22 என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.
இது போல் பாகூர்-கன்னியக்கோவில் சந்திப்பு ரோட்டில் கடலூர் சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த பழனிவேல் 27 என்பவர் மது குடித்துவிட்டு ரகளை செய்தார். அவரை கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.