ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி. 
புதுச்சேரி

எம்.ஐ.டி கல்லூரியில் உலக சுற்றுசூழல் தின விழா

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுமாணவர்கள் ஒரு பிரிவிலும் 9, 10 என்று ஒரு பிரிவிலும் 11 மற்றும் 12 ஒரு பிரிவிலும் தலா 3 பரிசுகளும் ஒவ்வொரு பிரிவிலும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுச்சேரி மணக்குள விநாயகர்தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை சார்பில் உலக சுற்றுசூழல் தினம் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் மருத்துவர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்தி பேசினார்.

இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் ராஜாராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 75 பள்ளிகளிடமிருந்து 2500 மேற்பட்ட ஓவியங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. அவைகளில் இருந்து சிறந்த ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவிலும் 9, 10 என்று ஒரு பிரிவிலும் 11 மற்றும் 12 ஒரு பிரிவிலும் தலா 3 பரிசுகளும் ஒவ்வொரு பிரிவிலும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் மலர்கண் முன்னிலை வகித்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.