கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை இன்ஸ்பெக்டர் கணேசன் தொடங்கி வைத்தார். 
புதுச்சேரி

உலக சுற்றுசூழல் தினம்

உலக சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மாலை மலர்

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கிளப் மகேந்திரா நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை சீனியர் செயற்பொறியாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், ராஜமாணிக்கம், கிளப் மகேந்திரா நிறுவன பொதுமேலாளர் மோகன்ராஜ், மனிதவள மேலாளர் பிரபு, தலைமை சமையல் கலைஞர் பாஸ்கர் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.