அமைச்சர் நமச்சிவாயம் வேட்டி சேலை வழங்கிய போது எடுத்த படம் 
புதுச்சேரி

புதுவையில் திட்டங்களை நிறைவேற்றுகிறோம்-அமைச்சர் நமச்சிவாயம் பெருமிதம்

நெட்டப்பாக்கம் தொகுதி பா.ஜனதா செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் கல்மண்டபம் பகுதியில் பா.ஜனதா ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.புதுவையில் விரைவில் ரேஷன் கடைகளில் மீண்டும் அரிசி வழங்கப்படும்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் தொகுதி பா.ஜனதா செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் கல்மண்டபம் பகுதியில் பா.ஜனதா ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

அமைச்சர் நமச்சிவாயம் ஏழைகளுக்கு வேட்டி,சேலை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி புதுவையில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கி தருகிறார். இதனால்தான் புதுவையில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. புதுவையில் விரைவில் ரேஷன் கடைகளில் மீண்டும் அரிசி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை குமரன், தனஞ்செழியன், அய்யப்பன் ஜெயமூர்த்தி, கதிரேசன், அரிபாசுகுமார், முருகையன், லோகநாதன், விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.