புதுச்சேரிக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களில் இருந்து தினமும் காய்கறிகள் லாரிகள் மூலம் விற்பனைக்கு வருகிறது.
தற்போது புதுச்சேரிக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சாம்பார் வெங்காயம் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. இதே போல் முருங்கைக்காய் விலையும் ரூ.150யை தொட்டுள்ளது. மற்ற காய்கறிகள் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலைகளும் உயர்ந்துள்ளது.
புதுச்சேரி பெரிய மார்க்கெட் டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலைகள் வருமாறு:-
(அடைப்பு குறிக்குள் பழைய விலை குறிப் பிடப்பட்டு ள்ளது) கத்தரிக்காய்- ரூ.80 (ரூ.40),
பீன்ஸ்-ரூ.50 (ரூ.70), தக்காளி- ரூ.20 (ரூ.30), பெரியவெங்காயம் ரூ.70 (ரூ.35), கோஸ் ரூ.30 (ரூ.30), கேரட் ரூ.50 (ரூ.30), கோழி அவரை ரூ.100 (ரூ.50), உருளை ரூ.55 (ரூ.30), சேனைக்கிழங்கு ரூ.60 (ரூ.50) பூண்டு ரூ.260 (ரூ.200), நெல்லிக்காய் ரூ.70, மாங்காய் ரூ.80.
இது குறித்து காய்கறி வியாபாரி ஒருவரிடம் கேட்ட போது புதுச்சேரிக்கு தேவையான காய்கறிகள் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது.
பூண்டு கர்நாடகாவில் இருந்தும், இஞ்சி கேரளத்தில் இருந்தும் அதிக அளவில் வருகிறது. புதுச்சேரிக்கு தேவையான சாம்பார் வெங்காயம் திண்டுக்கல், திருப்பூர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வருகிறது.
தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சாம்பார் 'வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்துள்ளதால் விலைகள் தாறுமாறக உயர்ந்துள்ளது.
மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. ஐய்யப்ப பக்தர்கள் நாளை முதல் விரதத்தை தொடங்குவார்கள். அவர்கள் சபரிமலை செல்லும் வரை சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்வதால் காய்கறிவிலை கனிசமாக உயரும் வாய்ப்புள்ளது என்றார்.