புதுச்சேரி

இன்று பிறந்தநாள்: தமிழக அமைச்சர் என்.ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்க குவிந்த தவெக தொண்டர்கள்

அமைச்சர் ஆனந்துக்கு வாழ்த்துக்கூற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேன், பஸ், கார்களில் நேற்று இரவு முதல் த.வெ.க.தொண்டர்கள் புதுவைக்கு வந்திருந்தனர்.

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் ஆனந்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

த.வெ.க. பொதுச்செயலாளரும், தமிழகத்தின் அமைச்சருமான என்.ஆனந்துக்கு இன்று பிறந்தநாள்.

சிறப்பு பூஜை

ஜூலை 18, 1964ம் ஆண்டு பிறந்த அவருக்கு இன்று 62 வயது நிறைவடைந்துள்ளது. தனது பிறந்தநாளை இன்று புதுவையில் உள்ள இல்லத்தில் என்.ஆனந்த் கொண்டாடினார். இதற்காக இன்று காலை சின்னசுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.

பின்னர் வீடு திரும்பிய அவர், தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றார். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

த.வெ.க. தொண்டர்கள்

அமைச்சர் ஆனந்துக்கு வாழ்த்துக்கூற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேன், பஸ், கார்களில் நேற்று இரவு முதல் த.வெ.க.தொண்டர்கள் புதுவைக்கு வந்திருந்தனர். இதனால் நகர பகுதியில் த.வெ.க. கொடியுடன் வாகனங்கள் வலம் வந்தன.

அமைச்சர் ஆனந்த் இல்லம் உள்ள ரெயில்வே நிலையம், புஸ்சி வீதி பகுதியில் தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்து நகரின் பல இடங்களில் பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தது.