புதுச்சேரி

புதுச்சேரியில் அழகிபோட்டி: பாரம்பரிய, நவீன ஆடை அணிந்து நடனமாடி அசத்திய திருநங்கையர்

தமிழ் பாரம்பரிய உடை, நவீன ஆடை மற்றும் நடனம் என 3 பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கையர் பங்கேற்று வண்ண வண்ண ஆடைகளில் ஒய்யார நடை நடந்து வந்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி வில்லியனூர் பிள்ளையார்குப்பம கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.

சித்திரை திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக திருநங்கைகளுக்கான அழகிபோட்டி நேற்று இரவு நடந்தது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த திருநங்கையர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழ் பாரம்பரிய உடை, நவீன ஆடை மற்றும் நடனம் என 3 பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கையர் பங்கேற்று வண்ண வண்ண ஆடைகளில் ஒய்யார நடை நடந்து வந்தனர். நடனமாடி தங்களது திறனை வெளிபடுத்தினார்கள்.

இறுதியில் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு திருநங்கையர் சங்க நிர்வாகிகள் ஷீத்தல்,கிரிஜா ஆகியோர் பரிசளித்தனர். அழகிபோட்டியில் மிஸ் பிள்ளையார்குப்பம் பட்டத்தை ரித்திகா தட்டி சென்றார். அவரை தொடர்ந்து ருத்ரா, ஐஸ்வரியா, தீனா ஸ்ரீ, தன்ஷ்யா ஆகியோர் அடுத்தடுத்த 5 இடங்களை பெற்றனர்.