புதுச்சேரி:
புதுவையில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
புத்தாண்டு, பண்டிகை, தொடர் விடுமுறை காலங்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏற்கனவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது.
அதிலும், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை. இதனால் குடும்பத்தோடு, பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் புதுவையில் முகாமிட்டுள்ளனர். இதனால் நகர பகுதியில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
சுற்றுலா தலங்களான நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு ஏரி, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இருந்தனர்.