புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்.9-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் 23-ந்தேதி வரை நடக்கிறது.
தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 23ம் தேதி கடைசி நாளாகும்.
கடந்த 24ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்த நிலையில் புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் 30 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள், அசாமில் 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.