கோப்பு படம். 
புதுச்சேரி

வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டல்

லதாவுடன் வந்த அவரது மதுவையும் கொலை செய்து விடுவதாக ஜெயக்குமார் மிரட்டினார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை வம்பாகீரப் பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மது. இவரது மனைவி லதா (வயது36). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் ஜெயக்குமாரு க்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில்  லதா தனது கணவருடன் அப்பகுதியில் உள்ள தனது தந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மீன்மார்க்கெட் அருகே நின்றுக்கொண்டு மது குடித்துக்கொண்டிருந்த ஜெயக்குமார் திடீரென லதாவை வழிமறித்து உன்னை இங்கேயே அடித்து கொலை செய்து விடுவேன்.

மேலும் வெடிகுண்டும் வீசுவேன் என்று மிரட்டினார். அதோடு லதாவுடன் வந்த அவரது மதுவையும் கொலை செய்து விடுவதாக ஜெயக்குமார் மிரட்டினார்.

இதுகுறித்து லதா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.