லாரி உரிமையாளர், லாரி டிரைவர் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதகடிப்பட்டில் பிரபல தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரி வளாகத்தில் மாணவர் விடுதி கட்டுமான பணி வேல்ராம்பட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிக்கு ஆந்திர மாநிலம் திருப்பதி காலஹஸ்தி பகுதியில் இருந்து இரும்பு கம்பிகள் 52.8 டன் கடந்த 11-ந் தேதி லாரி மூலம் அனுப்பப்பட்டது. இந்த லாரி 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு புதுவை கல்லூரி வளாகத்தில் மாணவர் விடுதி கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தது.
லாரியில் ஏற்றப்பட்ட 52.8 டன் கம்பிகள் எடை சரியாக இருந்த போதிலும் இறக்கப்பட்ட கம்பிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆய்வு மேற்கொண்டதில் 4½ டன் இரும்பு கம்பிகள் குறைவாக இருப்பது தெரியவந்தது.
லாரியின் கேபின் பகுதியில் ரகசிய அறை அமைத்து அதில் இரும்பு கம்பிகளின் எடைக்கு பதிலாக கருங்கல் ஜல்லிகள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த திருட்டு மற்றும் மோசடி குறித்து திட்ட மேலாளர் ஹரிஹரசுதன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர், லாரி உரிமையாளர், லாரி டிரைவர் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.