புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தனர். 
புதுச்சேரி

கடைகளை ஏற்கனவே வைத்திருந்த வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்

புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு கோரிக்கைபஸ் நிலையத்தை செம்மைப்படுத்தும் பணியினை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுச்சேரி வணிகர் கூட்ட மைப்பின் பெருந்தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலை மையில் கூட்டமைப்பின் தலைவர் பாபு, பொருளாளர் தங்கமணி, ஒருங்கிணைப்பாளர் சித்திக், பஸ் நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவர் கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

அதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்த இருக்கும் பஸ் நிலையத்தை செம்மைப்படுத்தும் பணியினை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

தற்போது அங்கு உள்ள கடை உரிமையாளரிடமே மீண்டும் கடையை ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

நகராட்சி ஆணையர் புதுச்சேரி வணிகர் கூட்ட மைப்பினரின் வேண்டு கோளை ஏற்று கடைகளை ஏற்கனவே உள்ள வியாபாரி களிடமே ஒப்படைப்பதாக உறுதியளித்தார்.