புதுச்சேரி

நடிகை கவுதமி பிரச்சனை தீர்க்கப்பட்டு இருக்கலாம்: கவர்னர் தமிழிசை பேட்டி

கவுதமியை பொறுத்தவரை பந்தா இல்லாமல் பணியாற்றுபவர்.கவுதமி கஷ்டப்படுகிறார், துன்பப்படுகிறார், நீதி கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் விளையாட்டு துறையில் சிறப்பிடம் பெறுபவர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் உள்ள போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.

நடிகை கவுதமியின் சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். பெண்கள் அரசியலில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

அரசியலில் பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். கவுதமியை பொறுத்தவரை பந்தா இல்லாமல் பணியாற்றுபவர்.

அவர் பிரச்சனை தீர்க்கப்பட்டு இருக்கலாம். என்னிடம் அவரது பிரச்சனை வரவில்லை. அவர் கஷ்டப்படுகிறார், துன்பப்படுகிறார், நீதி கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது.

தெரிந்திருந்தால் உதவி செய்து இருப்பேன். கரு அழகப்பனை எனக்கு தெரியாது. அவர் கோவில் கோவிலாக செல்வார். என்னை வந்து பார்த்தார். அதைத் தவிர வேறு இணைப்பு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.