புதுச்சேரி

புதுச்சேரியில் வீட்டை சொகுசு விடுதியாக மாற்றி அழகிகளை வைத்து விபசாரம்- 2 பேர் கைது

விடுதியில் விபசார தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். விபசார தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி:

புதுவை ரெயின்போ நகரில் சமீபத்தில் ஒரு வீட்டை தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு இருந்தது.

அந்த விடுதிக்கு பெண்களும், ஆண்களும் வந்து போவதுமாக இருந்தனர். இதனால் அந்த விடுதியில் விபச்சாரம் நடக்கலாம் என அப்பகுதி மக்கள் பெரிய கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு அந்த விடுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த விடுதியில் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்தனர்.

விடுதி அறைகளில் விபசார தொழிலுக்கு பயன்படுத்தும் காண்டங்களும் இருந்தன. இதனால் அந்த விடுதியில் விபசார தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அங்கிருந்த 2 ஆண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்களில் ஒருவர் திண்டிவனம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (62) விடுதி மேலாளராகவும் மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் என்ற அருண்குமார் விபசார புரோக்கராக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் விபசார தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT