புதுச்சேரி

சமூக வலைதளத்தில் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி உல்லாசத்துக்கு அழைப்பு

மர்மபெண் ஒருவர், பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய போலி கணக்கு தொடங்கினார்.சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புதுச்சேரி:

புதுவை திருவள்ளுவர் நகரை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

அவர் சமூக அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருகிறார். அப்பெண் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வருகிறார்.

அந்த சமூக வலைதளங்களில் அவரின் தனிப்பட்ட புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே மர்மபெண் ஒருவர், அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய போலி கணக்கு தொடங்கினார்.

அந்த கணக்கில் தன்னுடன் உல்லாசமாக இருக்கலாம் போன்ற பதிவும் இடம் பெற்றிருந்தது. அதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.

மேலும் அவரது புகைப்படங்களை வைத்து தொடங்கப்பட்டுள்ள போலி கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT