புதுச்சேரி:
புதுவை சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வரும் 23-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. புதுவையில் படிக்கும், பணிபுரியும் தமிழக வாக்காளர்கள் வாகக்களிக்க ஏதுவாக 23-ந்தேதி ஒருநாள் புதுவைக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தை சார்ந்த மாணவர்கள் அதிக அளவில் புதுவை மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் மருத்துவம், பொறியியல் படிக்கின்றனர். தமிழகத்தை சார்ந்தவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக அளவில் புதுவையில் பணிபுரிகின்றனர். அவர்கள் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக விடுமுறையை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.