முதலிடம் மாணவன் மாதேஷ் குமாருக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி. 
புதுச்சேரி

தேசிய சதுரங்க போட்டியில் மாணவன் மாதேஷ்குமார் முதலிடம்

ஓசூர் அதியமான் கல்லூரியில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களிடையிலான சதுரங்க போட்டி நடந்தது. போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 537 மாணவர்கள் பங்கேற்றனர். இதே போட்டியில் புதுவை மாணவன் வருண் பிரபாகரன் 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 15-வது இடமும், கனிஷ்வர்மா 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 9-வது இடமும் பெற்றனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

ஓசூர் அதியமான் கல்லூரியில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களிடையிலான சதுரங்க போட்டி நடந்தது.

போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்து 537 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டி 7 ,9 ,11 ,13, மேற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நடந்தது.

போட்டியில் 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் புதுவை மாணவர் மாதேஷ் குமார் 9-க்கு 8 புள்ளிகள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.

இதே போட்டியில் புதுவை மாணவன் வருண் பிரபாகரன் 13 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 15-வது இடமும், கனிஷ்வர்மா 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 9-வது இடமும் பெற்றனர்.