புதுச்சேரி

10, 12ம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி- கல்வித்துறை உத்தரவு

நாள்தோறும் துணைதேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். கால அட்டவணை தயாரித்து பயிற்சி, திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவையில் 10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் மொத்தமாக 971 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த துணை தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு கல்வித்துறை இயக்குனர் மோகன்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாள்தோறும் துணைதேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். கால அட்டவணை தயாரித்து பயிற்சி, திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வருகை பதிவேடு கையாள வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றிபெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்களை கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT