புதுச்சேரி

காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

மணிவண்ணன் திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

மாலை மலர்

புதுச்சேரி:

காரைக்கால் நகர் பகுதியான தோமாஸ் அருள் திடலில் வசிப்பவர் மணிவண்ணன் (வயது 36). இவர் காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில், தனது உறவினர் வீட்டு அருகில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். நாளடைவில் அந்த சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் பெற்றோர் திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.