கோப்பு படம். 
புதுச்சேரி

உலக தாய்மொழி தினத்தையொட்டி கருத்தரங்கம்

புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் உலக தாய் மொழி தினத்தையொட்டி காணொளி மூலம் உலகளாவிய கருத்தரங்கம் நடத்தியது. மலேசிய நாட்டின் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த பழனியம்மாள் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுச்சேரி:

புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் உலக தாய் மொழி தினத்தையொட்டி காணொளி மூலம் உலகளாவிய கருத்தரங்கம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு பேராசிரியர் தமிழியலன் தலைமை தாங்கினார். சிந்தனையாளர் பேரவை தலைவர் கவிஞர் கோ.செல்வம் நோக்கவுரையாற்றினார். புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ்.ராமலிங்கம், மன்னர்மன்னன் படைப்பாளர் அறக்கட்டளை பொதுச்செயலாளர் ராமதாஸ்காந்தி, மலேசிய நாட்டின் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த பழனியம்மாள் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து மலேசிய நாட்டை சேர்ந்த மோகன்குமார், செல்லையா, குணசீலன் சுப்பிரமணியன், பழனிகிருஷ்ண சாமி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இதில் உலகில் உள்ள ஏராளமான தமிழர்கள் காணொளி மூலம் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT