எலக்ட்ரானிக் சிகரெட்டு பறிமுதல் செய்த காட்சி. 
புதுச்சேரி

எலக்ட்ரானிக் சிகரெட்டு பறிமுதல்

புதுவை மிஷன் வீதியில் வெளிநாட்டு பொருட்கள் விற்கும் கடையில் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.எலக்ட்ரானிக் சிகரெட்டை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை மிஷன் வீதியில் வெளிநாட்டு பொருட்கள் விற்கும் கடையில் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பெரியகடை போலீசார் சோதனையிட்டதில் மிஷன் வீதியில் 2 கடையில் விற்க ப்பட்டது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் ரெயின்போநகரை சேர்ந்த நித்துஷ்(38), புஸ்சி முல்லா வீதியை சேர்ந்த சையது முஸ்தபா(65) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் சிகரெட்டை இறக்குமதி செய்து விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.