புதுச்சேரி

கள்ள சந்தையில் விற்க பதுக்கிய 47 வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை பறிமுதல்- 30 வழக்குகள் பதிவு

வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக நிறுவனத்துக்கு பயன்படுத்துகிறார்களா? என புதுவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. வணிக கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் சிறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, விலை உயர்வால் டீ, காபி, உணவுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கள்ள சந்தையில் வணிக சிலிண்டர்கள் பதுக்கி வைத்து விற்கப்படுகிறதா?

வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக நிறுவனத்துக்கு பயன்படுத்துகிறார்களா? என புதுவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிகத்துக்கு பயன்படுத்தியது, ஓட்டல்களில் பதுக்கி வைத்தது என 30 வழக்குகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர். கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்த 47 வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT